9:42 PM
0
பேனா எழுதாப் புத்தகம்.
பேதங்கள் இல்லாப் பக்கம்.
உணர்வுகள் சொல்லும் அத்தியாயம்.
முகம் இல்லாத புத்தகம்.
முகப்புகள் உள்ள புத்தகம்.
மூச்சு இல்லாத சொந்தம்.
மலை இல்லாத வானம்.அலைகள் இல்லாத நதி.
வலைகள் உள்ள கடல்.

உறவுகள் இணைத்திடும் பாலம்.
உணர்வுகள் வளர்த்திடும் தேசம்.
அன்பு மலர்ந்திடும் சோலை.
எண்ணெய் இல்லாத விளக்கு.
என்றும் ஒளிரும் நிலவு.

பேசாப் பொருளும் பேசும்.
தூங்கும் விழிகளும் விழிக்கும்.
நட்பு,நேசம் வளர்க்கும்.

தகுதிகள் எல்லாம் உன் கையில் என்று 
இறைவன் தந்த அழகிய பந்து.
திறமைகள் கண்டு 
தெரிந்து கொள் என்று 
மனிதன் செய்த 
அழகிய மைதானம்.
நல்லவை மட்டும் 
எடுத்துக் கொள் .
அல்லவை எல்லாம் 
அழித்து விடு.

அழித்து அழித்து எழுதினாலும் 
அழியாத வானம்.
முகப் புத்தகம் ..உன் 
முகம் பதிக்கும் 
புத்தகம்.                              கவிஞர் :[மணிமேகலை புதல்வி ]கார்த்திகா.