2:42 PM
0

நீ சென்ற இடம் தேடி
என் கால்களும் விரைகிறதே
உந்தனது முகம் பார்க்க
என் விடியல்களும் விடிகிறதே
உந்தன் வார்த்தைகள் சேமிக்க
என் மௌனங்கள் கலைகிறதே
உன் பாசத்தை சுவாசிக்க
என் நெஞ்சமும் விரும்புறதே

நீ விட்டுச்சென்ற இடத்திலேயே
விட்டிட முடியாமல் 
ஸ்தம்பித்து நிற்கிறதே
என்னுடைய இதயமும்...
உன் கோபங்கள் பிடிக்கும் என்றேன்
எனக்கு பிடிக்கும் என்பதற்காய்
நிரந்தரம் ஆக்கிடாதே...

விரும்பிய உன்னை வெறுத்திட 
முடியாமல் விரும்பியே நிற்கும்
பிரியமானவள் நான்.
வந்திடு என்னவனே.
                                            கவிஞர் : பிரியா இராசேந்திரம்.