0
என்னை பற்றி சொல்வதற்கு ஒண்ணுமே இல்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன். ஒரு ரஷிய நாட்டு பழமொழி ஒன்னு இருக்கு அதாவது "ஒரு உண்மைக்குள் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் உண்டு". என்னதான் ஒருத்தன் உண்மை சொன்னாலும், அதில் கொஞ்சமாச்சு கொக்கு மக்காய் சில பொய்கள் ஒளிந்து இருக்கும். சரி இதை நான் எதுக்கு சொல்லுறேன்ன்ன வர வர என் பதிவில் கருத்துக்களே இல்லை என்று இலங்கை  நாட்டு அமைச்சர் ஒருவர் ஈமெயில் அனுப்பிருந்தார். 


சரி  சரி சில உன்மைகள சொல்லித்தான் ஆகணும் டென்சன் ஆகாத ... என்னைச் சொன்னேன்!!

நான் நிறைய புத்தகங்களை படிப்பேன், ஆனால் அதை பற்றி பேச பிடிக்காது. என்னை எப்பொழுதும் முட்டாளாய் காட்டிக் கொள்ள பிடிக்கும்.


பெயர் : வைக்கவில்லை.

பள்ளிகூடம் : போனதில்லை.
பாடம் : படித்ததில்லை.
வயசு : அது ஆச்சிங்க ஒரு நாலு கழுதை வயசு ! 
சொந்த ஊர் : யாழ்ப்பாணம்.
வேலை :உதயன் வானொலி அறிவிப்பாளர்.
பொழுது போக்கு : இண்டேர்நேட மேயுறது,கவிதை எழுதுவது,நித்திரை கொள்ளுவது.

எனக்கு பிடிச்சது,  நான் ரசித்தவை, இதெல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி குடுக்க நெனைக்கிறேன்.  பிடிச்சிருந்தா  சொல்லுங்கள்.


கற்றோர்களிடம் இருக்கும் "களை"களை களைய விழைபவன். கல்லாதோரின் எண்ணிக்கையை குறைக்க விரும்புபவன்.இப்டில்லாம் ஓவரா பேசினா உங்களுக்கு தூக்கம் வரும்னு தெரியும், என்ன பண்றது நான் சொன்ன ரெண்டாவது  வரியை நீங்க நம்பனும் இல்ல .நல்லா பழகி நீங்க தான் சொல்லணும் நான் எப்படின்னு?

யார் இவன்? அப்படின்னு நீங்கள் நினைக்கலாம்.
இணையத்தில் முகம் தெரியாது முகவரிகளை மட்டுமே தெரிந்து கொண்டு கடந்து போகும் ஆயிரத்தில் ஒருவன்! வேறு? இதற்கு மேல் எதிர்பார்த்திருந்தால் மன்னிக்கவும்!